பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை: 20,000 அபராதம் விதிப்பு
புதுடெல்லி: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டு சிறையும், 20,000 அபராதமும் விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுடெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள 33 வயது ெபண் ஒருவர் ஒன்று விட்ட சகோதரியின் வீட்டுக்கு ( சித்தப்பா பெண் ஆவார்) சென்றுள்ளார். சகோதரியின் கணவர் ரிக்ஷா ஓட்டி பிழைத்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி இரவு உறங்கும் போது சகோதரியின் கணவர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் ெசய்துள்ளார.
நடந்ததை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது. மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, அச்சம் காரணமாக இது குறித்து அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு திரும்பவும் அதே குற்றத்தை செய்ய வந்துள்ளார். தனியாக இருந்த அந்த பெண் கதவை திறக்கவில்லை. போலீசுக்கு தகவல் அளித்தார். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. மூன்று நாட்கள் கழித்துதான் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு கருணை காட்ட வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சீவ் ஜெயின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி அளித்த தீர்ப்பு வருமாறு : பெண்ணின் மீதான பாலியல் தாக்குதல் அவரது உடல் மீதான தாக்குதல் மட்டுமில்லை. அவரது ஆத்மாவை, உள் மனதை காயப்படுத்தி வெட்கி தலைக்குனிய வைக்கும் ஒன்றாகும்.
அந்த பெண்ணின் ஒட்டுமொத்த பெர்சனாலிட்டியையும் அது அழிக்கும். கொலைக்காரன் உடலை மட்டுமே அழிக்கிறான். ஆனால், பாலியல் பலாத்கார குற்றவாளி, எதிர்க்க முடியாத அபலை பெண்ணின் ஆத்மாவையே நோகடிக்கிறான். இது வாழ்நாள் முழுவதும் அவர்களை கூனி குருக வைக்கும். அருவருப்பு, அவமானம், குழப்ப நிலை, வெட்கம், பயம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்படுத்தும். நமது சமுதாயம் புதுமை விரும்பாத பழைய கட்டுப்பெட்டியானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏற்கிறோம். எந்த இளம் பெண்ணும் தன்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என பொய்யாக கூற மாட்டார். இதனால் அவரது வாழ்க்கையே சூன்யமாகிவிடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறையும், 20,000ம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.