அர்மீனியா – அசர்பைஜான் இடையிலான மோதல் போராக மாறிய நிலையில், அது 6 ஆம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் நகோர்னோ – கராபக்கின் பெரும்பாலான பகுதிகளை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது.
அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் அசர்பைஜான் ராணுவத்தினர் கடந்த 27 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் அர்மீனிய ராணுவமும் இணைந்துள்ளது. தற்பொழுது அந்த மோதல், போராக மாறிய நிலையில், பயங்கர ஆயுதங்களை கொண்டு இருதரப்பும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தப்போர், ஆறாம் நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த போரில் அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ்.தீவிரவாதிகளை துருக்கி களமிறக்கியது.
இருநாடுக்கும் இடையே நடக்கும் இந்த போரை தடுக்கும் முயற்சியை இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வந்த நிலையில், அதனை நிராகரித்து சண்டையிட்டு வருகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…