கொரோனாவிலிருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளான 68 வயது சீன பெண்!
சீனாவில் 68 வயதுள்ள பெண்மணி கொரோனாவிலிருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் ஜிங்ஜோ எனும் பகுதியில் உள்ள 68 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குணமடைந்து, தற்போது மீண்டும் கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு சமூக பரவலாக மாறுவதற்கு முன்பதாகவே இந்த பெண்மணி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்பு சிகிச்சை பெற்று பிப்ரவரி மாதம் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், குணமடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது இவருக்கு மீண்டும் இந்த அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவரை சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பொழுது அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.