உக்ரைனை விட்டு 6,60,000 பேர் தஞ்சம்- ஐ.நா ..!

Published by
murugan

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மத்தியில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறினர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா உள்ளிட்ட பிற ஆதரவு நாடுகள் தெரிவித்துள்ளன.

உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் இதுவரை 350 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்ட்டுள்ளது.  ரஷ்யா மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவும் பிற நாடுகளும் யோசித்து வருகின்றன.

மறுபுறம், உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்தது.  இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், “கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவர் நவீன் என்பதும், நவீன் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வந்தார். நவீன் கர்நாடகா மாநிலத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago