ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – ஐ.நா அறிக்கை.!

Default Image

ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக United Nations அறிக்கை கூறுகிறது.

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6000 முதல் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக United Nations அறிக்கை கூறுகிறது. ஐ.நா சபையின் ஆய்வில் உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்பித்தது.

மேலும் ஆஃப்கானிஸ்தானில் அல் காய்தா இயக்கம் தாலிபான்கள் உதவியுடன் 12 மாகாணங்களில் இயங்கி வருவதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளை அழைத்து வருவதில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் ஐ எஸ் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளை நடத்துவதற்கு இரு குழுக்களும் பொறுப்பு என்று அறிக்கை கூறியுள்ளது. பிப்ரவரியில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட போதிலும் ஆப்கானிஸ்தான் தலிபான் மற்றும் அல்கொய்தா இடையேயான நெருங்கிய தொடர்புகளையும் ஐ.நா அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்