கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 65 WHO ஊழியர்கள்..?
ஜெனீவாவில் தலைமையகத்தை அடிப்படையாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பு 65 ஊழியர்களிடையே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதில், 32 பேர் தலைமையகத்தில் உள்ள வளாகத்தில் பணிபுரிந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 32 பேர் எவ்வாறு, எங்கு பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கொரோனா அலுவலகங்களில் பரவுதல் நடந்ததா..? என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதை நேற்று WHO உறுதிப்படுத்தியது, இதுபோன்ற கொரோனா உறுதி செய்யப்பட்டதை WHO பகிரங்கமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
WHO இன் வணிக நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் ரவுல் தாமஸ் வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ஐந்து பேர் ஒரே அணியில் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்ட ஒருவருக்கு கொரோனா உறுதி செய்ததாகக் குறிப்பிட்டார். கடந்த வாரத்தில் சில பேருக்கு கொரோனா உள்ளன என்று WHO தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் நேற்று உறுதிப்படுத்தினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வளாகத்திற்கு வெளியே பாதிக்க வழிகள் உள்ளன. எனவே நாங்கள் இன்னும் விசாரணையை செய்கிறோம் என தெரிவித்தார். WHO, ஊழியர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன் தகவல் வெளியாகிய நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, வான் கெர்கோவ் தலைமையகத்தில் எந்த பரிமாற்றமும் இல்லை என்று கூறியிருந்தார். நிர்வாகம் சிறப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.