இத்தாலியில் ஒரே நாளில் 625 பேர் உயிரிழப்பு..!
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது. மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் 12,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து, இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்துகொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவுவதை தவிர்க்க, அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு பல தடைகளை விதித்துள்ளது. அவசர தேவைகளை தவிர்த்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணிநேரத்தில் 5,986 பேர் பாதிக்கப்பட்டு, 625 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 53,007 பேர் பாதிக்கப்பட்டு, 4,657 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.