அமெரிக்காவில் 61 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை! அதிர்ச்சியில் அமெரிக்கா!
அமெரிக்காவில் 61 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை. அதிர்ச்சியில் அமெரிக்கா.
முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்க துவங்கியது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே, அமெரிக்காவில் இதுவரை இந்த வைரஸ் நோயால், 10,64,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் 2,390 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அமெரிக்காவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், மீண்டும் ஒவ்வொரு நாளும் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.