மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலகமே பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தவிர மற்ற நோயாளிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் கர்ப்பிணி பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போதிய மருத்துவ வசதி கிடைக்காததே இதற்க்கு காரணம் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவ கவனிப்பு இல்லாமை, நிமோனியா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் புதிதாக பிறந்த குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றனர். இதுதொடர்பாக பேசிய சுகாதார இயக்குநர் அமன் போர், ‘கொரோனா தொற்று காரணமாக மாநில சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் திசை திருப்பப்படுவதால், தாய்- சேய் இறப்பு விகிதம் அதிகம் உயர்ந்துள்ளது கவலைக்குரியது என்றும், போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.