#Breaking:6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி -உக்ரைன் அதிபர்!

கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்த வகையில்,7 வது நாளாக உக்ரைனின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து,உக்ரைனின் பொருளாதார மண்டலமாக உள்ள கெர்சன் நகரை முழுமையை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
3 லட்சம் மக்கள் தொகை கொண்ட கெர்சன் பகுதியில் 20% பேர் ரஷ்ய நாட்டினார். கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த முக்கிய நகரமாக கெர்சன் பார்க்கப்படுகிறது. உக்ரைனில் நோவா, ககோவ்கா உள்பட இரு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இதனை,கெர்சன் நகரை முழுமையை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளதை உக்ரைன் ஆளுநரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில்,உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய படைகளைச் சேர்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.