60 ஆம் ஆண்டை கொண்டாடும் ஸ்மர்ஃப் கார்ட்டூன் கதாபாத்திரம்..!

Default Image

 

உலகம் முழுவதும் குழந்தைகளைக் கவர்ந்த ஸ்மர்ஃப் (Smurfs) கதாபாத்திரம் அறிமுகமான 60-ஆம் ஆண்டு விழா பெல்ஜியத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நீல வண்ணத்தில் உடல், குள்ளமான தோற்றம், சுறுசுறுப்பு, துடுக்குத்தனமான பேச்சு என ஸ்மர்ஃப் கதாபாத்திரத்தை பார்த்ததுமே குழந்தைகள் மயங்கிப் போவார்கள். பெல்ஜியத்தைச் சேர்ந்த பீர்ரே கல்லிஃபோர்டு (Pierre Culliford) என்ற கார்ட்டூன் கலைஞர், 1958 -ஆம் ஆண்டு ஸ்மர்ஃப் பாத்திரத்தை உருவாக்கினார்.

உலகம் முழுவதும் குழந்தைகள் உலகத்தை மகிழ்வித்து வரும் ஸ்மர்ஃப் பாத்திரத்துக்கு 60 வயதாவதை, அதன் பூர்விகமான பெல்ஜியம் கொண்டாடி வருகிறது. பிரசல்ஸ் நகரில் ஸ்மர்ஃப்-களின் கிராமம், குகை, மலை என பிரம்மாண்டமான அரங்கம்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பொம்மைகள் முதல் நவீன தொழில்நுட்ப முறை வரை ஸ்மர்ஃப் பாத்திரங்கள் வலம் வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்