திரையரங்குகளை புதுப்பிக்க 6 மாத அவகாசம் தேவை – தமிழக திரையரங்க உரிமையாளர்கள்!
கொரோனாவால் அடைக்கப்பட்ட திரையரங்குகளின் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் தேவை.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளை கொண்ட தமிழகத்தில், வருடம் தோறும் திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது வழக்கம். ஆனால், இதற்கு பொதுப்பணித்துறை, காப்பீடு துறை, மின்துறை, ஆகியவற்றின் உதவி தேவை.
இருப்பினும் அது சாத்தியமில்லை. ஏனெனில் இந்த திரையரங்குகளின் உரிமம் புதுப்பிக்க வேண்டுமானால், கொரோனா மூலம் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வேண்டும். அதற்கு காலம் செல்லும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு 6 மாதமாவது கால அவகாசம் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து பேசிய திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர், கொரோனா பிரச்சனைகள் நீங்கி திரையரங்குகள் திறக்க காலம் ஆகும்,எனவே கால அவகாசம் தேவை என கூறியுள்ளார்.