பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், கொரோனா நோயாளிகள் உட்பட 6 பேர் இறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், பாகிஸ்தானில் தற்போது இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் இது முந்தைய அலையை விட, மிகவும் அதிக வேகமாக பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், 6 நோயாளிகள் இறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கைபர் போதனா மருத்துவமனையில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆக்சிஜன் சப்ளை இல்லாததால், ஒரே இரவில் ஆறு நோயாளிகள் இறந்துள்ளனர்.
ஆறு பேரில் ஐந்து பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும், மற்றொருவர் வேறுபாடு வார்டில் உள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குளிர்காலத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அதிகம் தேவை என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …