கொரோனாவுக்கு பின் அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள 6 அடி அலுவலக முன்மாதிரி!

Default Image

கொரோனாவுக்கு பின் அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள 6 அடி அலுவலக முன்மாதிரி.

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும், இது பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது, சில நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து, சற்று மீண்டு வரும் நிலையில், மேலும் இந்த வைரஸ் தாக்காமல் இருக்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சீன நிறுவனங்கள், மாறியுள்ள சூழலுக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.  இதனையடுத்து, கொரோனாவுக்கு பின், அலுவலக சூழலை பாதுகாப்பாக அமைப்பது தொடர்பாக அமெரிக்க நிறுவனம் ஒன்று, 6 அடி அலுவலகம் என்ற பெயரில் முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.

அதன்படி, அங்கு பணி மேசைகளை 6 அடி இடைவெளி விட்டு அமைத்தல், எதிரும் புதிருமாக ஊழியர்கள் எதிர்ப்பதை தவிர்த்தல், அலுவலகத்தில் ஒரே ஒரு திசையில் மட்டும் நடப்பதற்கு அனுமதித்தல், அனைவரும் பொதுவாக தொடும் இடங்களில் தொழுவதை தவிர்க்கும் வகையில் சென்சார் பயன்படுத்துதல், அலுவலகத்தின் நுழைவதற்கு  ஸ்வைப் கார்டுக்கு பதிலாக கேமரா அல்லது மொபைல் போனில் க்யூ ஆர் கோட் பயன்படுத்துதல், அலுவலகங்களில் காற்றை வடிகட்டும் அமைப்புகளை நிறுவுவது, தும்மினாலோ இருமினாலோ அதன் மூலம் கிருமிகள் பரவுவதைத் தடுக்க பணி மேசைகளில் நெகிழ் கண்ணாடி தடுப்புகள் அமைப்பது, பரப்புகளில் பேப்பர் விரிப்புகளை தினந்தோறும் மாற்றுவது போன்றவை 6 அடி அலுவலகம் என்ற முன் மாதிரி அமைப்பின் சிறப்பு அம்சங்களாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்