மெக்சிகோவில் உள்ள சுகாதார கிளினிக் ஒன்றில் போலி தடுப்பூசி தயாரித்து 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தற்பொழுது அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக மெக்சிகோவில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது பல்வேறு நாடுகளிலும் கொரோன வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதை சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவில் உள்ள சிலர் போலியாக தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தடுப்பூசியை 2,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.5 லட்சத்துக்கு விற்பனையும் செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்தி போலி தடுப்பூசி தயாரித்து விற்பனை செய்த 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் கூறுகையில், நியூவோ லியோன் எனும் மாகாணத்தில் தான் இந்த போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வது அமையும் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளானர்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…