இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு 6 சர்வதேச ஆட்டங்களில் விளையாட தடை.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு ஆறு சர்வதேச ஆட்டங்களில் விளையாட தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவருக்கு ஆறு சர்வதேச ஆட்டங்களில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், இந்தாண்டுக்கான அவரது ஒப்பந்த ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாகவும் விதித்துள்ளது.
அவர் எந்த மாதிரியான ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் களத்துக்கு வெளியே தனுஷ்கா குணதிலகா ஒழுங்கீனமான முறையில் நடந்துகொண்டார் என்று இலங்கை அணியின் மேலாளர் அசன்கா குருசின்ஹா கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின்படி அபு தாபியில் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை அணியில் இருந்து தனுஷ்கா குணதிலகா நீக்கப்பட்டுள்ளார்.