உயர்நீதிமன்றம் டிசம்பர் 6-க்குள் தமிழக அரசு அறிக்கை தர வேண்டும் !கந்துவட்டி கொடுமை குறித்து…
கந்து வட்டி பிரச்சினை கடந்த சிலநாட்களாக நடந்த பிரச்சினையால் விறுவிறுப்பு அடைந்துள்ளது . நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட வழக்கில் டிசம்பர் 6ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சிந்து பூந்துரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடம்பத்தினர் தற்கொலை செய்துகொண்டதற்கு போலீசாரும் அரசு அலுவர்களும் தங்களது பணியை செய்யாமல் இருந்ததே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே நீதிமன்றம் தலையிட்டு இவர்கள் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். மேலும், அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்து தற்கொலை செய்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விரிவான அறிக்கையை டிசம்பர் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்