சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல்.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவானில் உள்ள யான் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் முதற்கட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை அந்நகரத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் நான்கு பேர் இறந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர் என நகரின் நிலநடுக்க நிவாரண தலைமையகம் (earthquake relief headquarters) தெரிவித்திருந்தது.
முன்னதாக, நகரின் நிலநடுக்க நிவாரணத் தலைமையகம், யான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மொத்தம் 13,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்த நிலையில், தற்போது அதன் புதிய புள்ளிவிவரங்களின்படி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சிச்சுவானில் உள்ள யான் லூஷன் கவுண்டியில் மாலை 5 மணியளவில் ஏற்பட்டது என சீனா பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்தது.
17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.4 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.9 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது என்றும் CENC கூறியிருந்தது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, நிலை-III தேசிய அவசரகால நிலை செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது, இந்த நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…