இன்றைக்குள் பதில்! இல்லை#59Apps_??இந்தியா கடும்எச்சரிக்கை!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதால் தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட செயலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது,மேலும் 79 அடங்கிய கேள்விகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் இன்றைக்குள் பதிலாளிக்காவிட்டால் 59 செயலிகளின் மீது நிரந்தரத்தடை மற்றும் இனி இந்தியாவில் கால் பதிக்க முடியாது என்று பகீரங்க எச்சரிக்கை மத்திய அரசு விடுத்துள்ளது.