ரூ.56 ஆயிரம் முதல் 1.77 லட்சம் வரை சம்பளம் – தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு …!
தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணி புரிவதற்கு சி.ஏ, பி.இ, பி.டெக் ஆகிய கல்வி தகுதி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படித்து இருக்க வேண்டும் எனவும், 5 ஆண்டுகள் அனுபவம் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வேலையில் மாதம் 56 ஆயிரம் முதல் 1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில், Manager (Finance) – 4 Manager (Legal) – 2 Senior Officer (Technical) – 8 Senior Officer (Finance) – 27 Senior Officer (Legal) ஆகிய காலி இடங்கள் உள்ளது.
இந்த பணிக்கு நேர்முகத் தேர்வும், ஆன்லைன் தேர்வும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பொது பிரிவினருக்கும் ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.