கனமழையால் பீகாரில் வெள்ளப்பெருக்கு – 56 பேர் உயிரிழப்பு..!!!
பிகாரில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புபடை தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பீகார், அசாம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் கனமழையால் 25 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஏராளமான ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.
பிகாரில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புபடை தெரிவித்துள்ளது. அராரியா, கிஷான்கஞ்ச், தர்பங்கா, மாதேபுரா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
65 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவ படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் படகில் சென்றும், விமானத்தில் சென்றும் மக்களை மீட்டு வருகிறார்கள். கனமழை, வெள்ளத்தில் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.