அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்! காரணம் இதுதானா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா தொற்றால், பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான ரீகல் சினிமா, நாடு முழுவதும் உள்ள 543 தியேட்டர்களை மூடும் நிலைக்கு வந்துள்ளது.
இதற்கு காரணம் கொரோனாவால், காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரீகல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சினிவேர்ல்டு 50 ரீகல் தியேட்டர்கள் மட்டும் வார விடுமுறை நாட்களில் செயல்படத் தொடங்கும் தெரிவித்துள்ளது.
மேலும், சினிமா தியேட்டர்களை மூடும் முடிவு என்பது தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள சினிமா தியேட்டர்களை தற்காலிகமாக மூடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றும் ஆனால், இறுதி முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், அனைத்து ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அறிவிப்போம் என்று சினிவேர்ல்டு தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது.