இங்கிலாந்தில் புதிதாக 5,288 பேருக்கு கொரோனா..737 பேர் உயிரிழப்பு.!
சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 200 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 18 லட்சத்து 58 ஆயிரத்து 612 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 696 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் ஒரே நாளில் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 10,612 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்தில் புதிதாக 5,288 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,279 ஆக அதிகரித்துள்ளது.