இரண்டாம் காலாண்டில் 51% சரிவை கண்ட தென் ஆப்பிரிக்க பொருளாதாரம்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும், உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் பாத்திக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாம் காலாண்டின் ஜிடிபி உடன் கடந்த ஆண்டை ஜிடிபி-யை ஒப்பிடுகையில் 51% குறைந்துள்ளது. இதில், கட்டுமானத்துறை 76.6 சதவீதமும், உற்பத்தி துறை 74.9 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் 1.8 சதவீதம் மட்டுமே சரிவை சந்தித்த நிலையில், இரண்டாவது காலாண்டில் பெரும் சரிவை தென் ஆப்பிரிக்கா சந்தித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் விவசாயம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. ஏனெனில், சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெக்கன் கொட்டைகளுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதால் விவசாயத் துறை மட்டும் 15% வளர்ச்சியை கண்டுள்ளது.
அதிலும், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்ததால், கட்டுமானத் துறை தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…