இந்தியாவில் இதுவரை 50,000 ஜாவா பைக் விற்பனை செய்துள்ளதாக கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா க்ளாஸிக், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகள் நிலைக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், ஜாவா மோட்டார் சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம் இந்தியாவில் ஜாவா 42, ஜாவா க்ளாஸிக், ஜாவா பெராக் என மொத்தம் 3 வகையான பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த 12 மாதங்களில் வெற்றிகரமாக நாடு முழுவதும் 50,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, டிசம்பர் இறுதிக்குள் நாடு முழுவதும் ஜாவா டீலர்களின் எண்ணிக்கையை 205 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. ஜாவா நிறுவனம் இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா நேபாள நாடுகளுக்கும் தனது பைக்குகளை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளதாக ஜாவா நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…