எகிப்து நாட்டின் அஸ்வான் மாகாணத்தில், தேள் கொட்டியதால் 500 பேர் மருத்துவமனையில் அனுமதி, 3 பேர் உயிரிழப்பு.
எகிப்து நாட்டின் அஸ்வான் மாகாணத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது இதனால் வீடுகள், விவசாய பண்ணைகள், வாகனங்கள் என கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தேள்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வெளியேறி தெருக்களிலும், வீடுகளிலும், வீதிகளிலும் வலம் வரத் தொடங்கியுள்ளது.
இதனால் அங்கு வாழ்ந்த மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கலீத் கபார் கூறுகையில் தேள் கொட்டி இதுவரை 500 மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தூசிப் புயல்கள், கன மழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக வெள்ளிக்கிழமை முதல் அங்கு உள்ள பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அஸ்வானின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல மண் செங்கல் வீடுகள் இடிந்து விழுந்தன. டிவி ஒளிபரப்பு, இணையம் மற்றும் மின்சாரம் ஆகியவை சில பகுதிகளில் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…