ஈராக் நாசிரியா நகரில் உள்ள கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈராக்கின் பிரதமர் இந்த தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் மேலாளரை சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டதாகவும், இந்த மருத்துவமனையில் 70 படுக்கைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட பொழுது இந்த அறையில் 63 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில், 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்து உள்ளனர். மீட்பு குழுவினர் தீவிரமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், தீ அதிக பகுதிகளில் பரவியுள்ளதால் மீட்பு குழுவினருக்கு சிரமம் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…