பொருளாதார பாதிப்பால் 50 கோடி பேர் ஏழ்மைக்குள் தள்ளப்படுவர்! ஐ.நா ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
பொருளாதார பாதிப்பால் 50 கோடி பேர் ஏழ்மைக்குள் தள்ளப்படுவர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அந்த வகையில்,கொரோனா கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பால், 50 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்படுவர் என்று ஐ.நாவின் ஆய்வு தெரிவித்துள்ளது. அதிலும், கிழக்கு, தென் ஆசியா, பசிபிக், ஆப்பிரிக்கா நாடுகளில் தான் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உலகவங்கி, சர்வதேச நிதியம், ஜி20 நாட்டுக்காலின் அமைச்சர்களும் அடுத்த வாரம் ஆலோசிக்க உள்ளனர்.