ஜெருசலேமில் ஏற்பட்ட மோதல்களில் 50 பேர் கைது…! 20 போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!
ஜெருசலேமில் ஏற்பட்ட மோதல்களில் 50 பேர் கைது. 20 போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு ஒரு முக்கிய இடமாக இருப்பது ஜெருசலேம். இந்த பகுதியில் சமீப நாட்களாகவே பதட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதியில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கான புனித ஸ்தலங்கள் உள்ளது. இந்நிலையில் ஜெருசலேமில் ஒரு முக்கிய புனிதத் தலத்தில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை நடைபெற்றது.
இதில் வன்முறை எழக்கூடும் என்பதால் முஸ்லிம் மதத் தலைவர்கள் கட்டுப்பாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்நிலையில் முஸ்லிம் புனித ரமலான் மாதம் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய போலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
பழைய நகரத்தின் டமாஸ்கஸ் வாயிலுக்கு வெளியே காவல்துறையினர் தடுப்புகளை வைத்ததனால் இந்த பதட்டம் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காவல்துறையினர் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசினர். அவர்கள் அதற்கு மாறாக தண்ணீர் பீரங்கி மற்றும் குண்டுகளை வீசி அவர்களை கலைத்தன.ர் இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்தனர்.
லஹாவா என்று அழைக்கப்படும் ஒரு தீவிர வலதுசாரி யூத குழு நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களின் அணிவகுப்பை நடத்தியது. அவர்கள் ‘அரேபியர்களுக்கு மரணம், அரேபியர்கள் வெளியேறுங்கள்’ என்று கோஷமிட்டனர். இந்நிலையில் ஜெருசலேமில் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள், பாலஸ்தீனர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற மோதலில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.