சே குவேரா 50ஆம் ஆண்டு நினைவு நாள் கியூபாவில் மாபெரும் மகத்தான பேரணி….!
மகத்தான புரட்சியாளன் சே குவேராவின்50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கியூபாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவரது நினைவைப் போற்றி பேரணிகளும், நினைவஞ்சலிக் கூட்டங்களும் நடை பெற்றன. கியூபாவில் அவரது நினைவிடம் அமைந்துள்ள சாந்தாகிளாரா நகரில் லட்சக்கணக்கான கியூப மக்கள் அவரது உருவப் படத்தை ஏந்தியவாறு மாபெரும் பேரணி நடத்தினர். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மிகுயேல், தியாஷ் கானெல் உள்ளிட்ட தலைவர்களும் அமைச்சர்களும் பங்கேற்று உரையாற்றினர். சாந்தா கிளாரா நகரில் உள்ள சே குவேரா சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய ரால் காஸ்ட்ரோ, தோழர் சே யின் 50ஆம் ஆண்டு நினைவை போற்றுகிற இந்த ஆண்டில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் வருவதை சுட்டிக்காட்டிய போது கியூப மக்களின் கண்களில் கண்ணீர் பெருகின.