தென் கொரியாவில் உள்ள தென் கிழக்கு பகுதியான குவான்ஜூ நகரில் உள்ள ஒரு சாலையில் பயணிகளை ஏற்றுவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்தில் உள்ள பேருந்து நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பஸ் நிலையம் அருகே ஒரு 5 மாடி கட்டிடம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் மீது இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் என பல சிக்கினர்.
எனவே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த கட்டிட விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
5 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கட்டிடம் பலவீனமாக இருந்ததாகவும் அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மேலும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…