இறுதிச்சுற்று எனும் தமிழ் திரைப்படத்தில் குத்துசண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் நடிகை ரித்திகா சிங். இவர் அதனை தொடர்ந்தும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிரபல தமிழ் நடிகர் அருண் விஜயுடன் பாக்ஸர் எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் அப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் அக்ட்டிவாக இருப்பவர் மட்டுமல்லாமல், ரசிகர்களுடன் நேரலையில் உரையாடவும் செய்வார்.
அப்படி அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலமாக நேரலையில் உரையாடிய இவர், தனக்கு தமிழ்நாட்டில் நூடுல்ஸ் மண்டை தான் பெயர் என்றும், தனது பெயராகிய ரித்திகா சிங்கை கூப்பிட்டால் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
அப்பொழுது, அவரது ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அப்பொழுது, அவர் நான் எப்பொழுதுமே சிங்கிள் தான் என கூறியுள்ளார். நான் உங்களை காதலிக்கிறேன் என அவர் கூறியதற்கு கண்டிப்பாக நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன், மேலும் 5 பேரையும் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.
நக்கலாக சொல்கிறீர்களா என கேட்டதற்கு இல்லை, நான் திருமணம் செய்தால் 5 மற்றும் அதற்கு மேற்பட்டோரை செய்வேன் அல்லது, திருமணமே செய்யமாட்டேன் என கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…