கொரோனா தடுப்பூசியை உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் – நிபுணர்கள் தகவல்
கொரோனாவுக்கான பயனுள்ள தடுப்பூசியின் போதுமான அளவுகளை உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று ஒரு சுறா ஆதரவு குழு தெரிவித்துள்ளது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஷார்க் அலீஸ் என்ற சுறா பாதுகாப்புக் குழு, உலகில் ஒவ்வொரு நபருக்கும் தலா ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்க, சுமார் 2.5 லட்சம் சுறாக்களின் கல்லீரல் தேவைப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்பட்டால், சுறாக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயரக்கூடும் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அழகு சாதனங்கள், இயந்திர எண்ணெய் மற்றும் பிற பொருட்களில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.