அதிர்ச்சி வீடியோ:திடீரென துப்பாக்கி சூடு நடத்திய நபர் – 5 பேர் பலி!
இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு அருகே,பினெய் ப்ராக் எனும் பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு அங்கிருந்த மக்கள் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
5 பேர் பலி:
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து,உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் குழு:
இசுலாமியர்களின் ரமலான் மாதம் நெருங்கி வருவதையொட்டி, கிளர்ச்சியாளர்கள் குழு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.இஸ்ரேலில் இது போன்ற தாக்குதல் சமீபகாலமாக சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதனை நடத்திய நபர் பாலஸ்தீனாவை சேர்ந்தவர் என அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை:
இந்த தாக்குதலை தொடர்ந்து,இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.அப்போது,இனி இஸ்ரேலில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாது வகையில் நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
#Israel: (NSFW) The attacker from the terrorist attack in Tel Aviv, apparently carrying an AR-15 pattern rifle. Given recent events and style, quite possibly ISIS-related. pic.twitter.com/KTHYBnbTOS
— Cᴀʟɪʙʀᴇ Oʙsᴄᴜʀᴀ (@CalibreObscura) March 29, 2022