இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதில் முதல் இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் வெளியான முதல் நாளில் 12.35 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் 5.81 கோடி வசூல் செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் 2.85 கோடி வசூல் செய்துள்ளது. நான்காவது இடத்தில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் 2.55 கோடி வசூல் செய்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் 2.10 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இன்று வெளியான கர்ணன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…