மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு சீனர்கள் உண்ணக் கூடிய 5 அருவருப்பான உணவுகள்..!

Default Image

நாம் அருவெருப்பென நினைக்கும் எந்தெந்த உணவுகளை, சீனர்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்று பார்ப்போம்.

சீனாவில் உணவை பொறுத்தவரையில், வானத்தில் பறக்கும் பறவைகள் முதல் தரையில் ஊரும் பிராணிகள் வரை அனைத்தையுமே உணவாக உட்கொள்கின்றனர். தற்போது. இந்த  பதிவில்,நாம் அருவெருப்பென நினைக்கும் எந்தெந்த உணவுகளை, சீனர்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்று பார்ப்போம்.

பாம்பு சூப்

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கூறுவர். ஆனால், சீனாவை  பொறுத்தவரையில், பலரும் பயப்படக் கூடிய, அருவருக்கக் கூடிய பாம்பை சூப்பாக செய்து சாப்பிடுகின்றனர். இந்த சூப் சீனாவில் ஹாங் காங் பகுதியில்  விற்கப்படுகிறது. இந்த சூப்  ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், குளிர் காலங்களில் உடல் இதமாக இருக்கவும் உதவுவதாக சீனர்கள் கூறுகின்றனர்.

சிலந்தி

சிலந்தியை வறுத்து சாப்பிடும் பழக்கம் சீனாவில் உள்ளானது. இந்த உணவு வகையானது பெய்ஜிங் பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இது சீனாவில் மட்டுமல்லாது, கம்போடியாவிலும் சிலந்திகளை பொரித்து சாப்பிடும் பாழாக்கம் உள்ளது. இந்த சிலந்தியின் விலை சீனாவில்  டாலர் என கூறப்படுகிறது.

பூச்சிகள்

நம் அனைவரும் பூச்சிகளை கண்டாலே பயந்து ஓடுவதுண்டு. ஆனால், சீனாவை பொறுத்தவரையில் அது தான் அவர்களுக்கு விஷேசமான உணவு. அந்த  வகையில், பூரான், கரப்பான்  பூச்சி,சிலந்தி மற்றும் வண்டுகள் என அனைத்துமே தெருவோரம் விற்கப்படக் கூடிய முக்கியமான உணவாகும்.

ஆக்டொபஸ்

கடல் உணவான கணவாயை நாம் அனைவரும் அவித்து தான் சாப்பிடுவதுண்டு. ஆனால், சீனாவில் அதனை உயிரோடு வைத்து, ஒரு குச்சியில் சுற்றி, ஷாஸில் முக்கி சாப்பிடுவர்.

முதலை

முதலை மனிதர்களை சாப்பிடுவது குறித்து தான் நம் கேள்விபட்டிருப்போம். ஆனால், மனிதர்கள் முதலையை சாப்பிடும் பழக்கம் சீனாவில் தான் உள்ளது. இந்த இறைச்சியை கோழி கறியை சாப்பிடுவது அவர்கள் சாப்பிடுகின்றனர். இது ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதாக அவர்கள் நம்புகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்