வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள காஸ் பஜார் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அப்பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இறந்துள்ளனர். கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்துள்ள பெற்றோர் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இவற்றை அறியாத குழந்தைகள் இரவில் தூங்கி கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது நிலச்சரிவில் சிக்கி வெளியேற முடியாமல் 5 குழந்தைகளும் இறந்துள்ளனர். இதில் 2 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேபோன்று நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…