நேபாளத்தில் உள்ள லாம்ஜங் கிராமப்புற நகராட்சியின் மையப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மத்திய நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.42 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மார்சியங்கிடி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காத்மாண்டு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக ராம்சரனின் தலைமை மாவட்ட அதிகாரி ஹோம் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலநடுக்கத்தில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததால் 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் மூலமாக ஏற்பட்ட சேதங்கள் ஆகியவை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…