பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் டாப் 5 இடங்களுக்குள் இந்தியா..!

Default Image

வாஷிங்டன் : பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த புள்ளிவிபத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசும், மெரிலாந்து பல்கலையும் இணைந்து இந்த ஆய்பை நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளன. இதில், 2016 ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயங்கரவாத தாக்குதல் நடந்த டாப் 5 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளி விபரம், 2015 ம் ஆண்டை விட 2016 ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016 ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளிலேயே அதிக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. 2016 ம் ஆண்டில் 106 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.இவற்றில் ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலேயே 55 சதவீதத்திற்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்களால் 75 சதவீதம் உயிரிழப்புக்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே நடந்துள்ளன.2015 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ல் பயங்கரவாத தாக்குதல்கள் 9 சதவீதமும், பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் 13 சதவீதமும் குறைந்துள்ளன. தாக்குதல்களும், உயிரிழப்புக்களும் குறைந்த நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும், அதிகரித்துள்ள நாடுகளில் ஈராக், சோமாலியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.2016 ம் ஆண்டில் நடந்த பெரும்பாலான தாக்குதல்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பாலேயே நடத்தப்பட்டுள்ளன. ஆனால் 2015 ல் தாலிபன்களாலேயே அதிக தாக்குதல்களால் நடத்தப்பட்டுள்ளன.

அதே போன்று பிரான்சில் மட்டும் கடந்த வருடத்தில் ஜனவரி 3,ஏப்ரல் 20,ஜூன் 23 தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்