"5 மாநில தேர்தல் முடிவுகள்"பொதுத் தேர்தலில் பிரதிபலிக்காது …. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து…!!
5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவை பொதுத் தேர்தலில் பிரதிபலிக்காது என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தோல்வியை கண்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அருண் ஜெட்லி, 2003 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதாகவும், ஆனால் 2004 பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியதாகவும் கூறியுள்ளார். எனவே இந்த முடிவுகள் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்காது என்றும், மாநில பிரச்னைகள் முற்றிலும் வித்தியாசமானது எனவும் தெரிவித்துள்ளார். 2019 தேர்தல் மத்திய அரசின் செயல்பாடுகளையும், மோடியின் தலைமையையும் சுற்றியே இருக்கும் என கூறியுள்ளார்.