471 நாட்களாக கொரோனவுடன் போராடும் அமெரிக்கர்… இருந்தும் இவர் இரண்டாம் இடம் தானாம்…
அமெரிக்காவை சேர்ந்த புற்றுநோயாளி ஒருவர் 471 நாட்கள் கொரோனவுடன் போராடி வருகிறார்.
கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தான் உலகை ஆட்டி படைத்தது வருகிறது என்றே கூறலாம். அதன் கோரப்பிடியில் சிக்கி கோடி கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இருந்தும் மற்றவர்களுக்கு தைரியமூட்டும் விதமாக பலரும் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களின் பேருதவியுடன் மீண்டு வந்து பலருக்கு நம்பிக்கை அளித்தனர்.
அப்படி ஒரு பெரு நம்பிக்கையை தான் அமெரிக்காவை சேர்ந்த ஓர் புற்று நோயாளி கொடுத்து வருகிறார். இவர் சரியாக 471 நாட்கள் கொரோனாவுடன் போராடி வருகிறாராம். அதுவும் இவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறதாம்.
கொரோனாவுடன் அதிக நாட்கள் போராடும் இரண்டாவது நபர் இவர்தானாம். முதல் நபர் சுமார் 505 நாட்கள் கொரோனவுடன் போராடியுள்ளார் இங்கிலாந்து சேர்ந்த நபர்.