சமையல் அறையில் இருந்த ஓவியத்திற்கு ரூ.46,55,52,892 கோடியா..? உறைந்து போன 90 வயது மூதாட்டி ..!

Default Image

பிரான்சில் உள்ள காம்பிக்னே நகரை சேர்ந்த தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்தார். இந்த வீடு 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த வீடாகும். இதைத்தொடர்ந்து அந்த நகரில் உள்ள ஏல அதிகாரிகளிடம் தனது வீட்டை விற்க வேண்டும் என கூறியுள்ளார் அந்த மூதாட்டி.

இதை தொடர்ந்து  ஏல அதிகாரிகள் மூதாட்டி வீட்டில் உள்ள மரபொருள்களை ஆய்வு செய்தனர். அப்போது சமையலறையில் எரிவாயு அடுப்பிற்கு மேலே  ஒரு பழமை  வாய்ந்த ஓவியம் ஒன்று இருந்தது. அதை பார்த்த அதிகாரிகள் ஓவியத்தை பற்றி பாட்டியிடம் கேட்டபோது இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும்  வேறு இடமில்லாமல் இந்த இடத்தில்  மாட்டி  வைத்துள்ளேன் என அவர் கூறினார்.

இதையடுத்து அந்த அதிகாரிகள் அந்த ஓவியத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஓவியம் 13-ம்  நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான சிமாய்பூ  என்பவரால் வரையப்பட்டது என்பது தெரியவந்தது.

மேலும் இங்கு ஓவியத்தின் மதிப்பு சுமார் 6 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.46,55,52,892 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் கூறினர். இதைக்கேட்ட மூதாட்டிக்கு இன்பஅதிர்ச்சி உறைந்து போனார். அந்த ஓவியத்தை அடுத்த மாதம் அக்டோபர் 27-ஆம் தேதி ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்