கொரோனா அச்சம் : 45,000 சிறைக்கைதிகள் விரைவில் விடுவிப்பு.!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் ஓரண்டங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில், இதுவரை 61,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,296 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மேலும், சிறைக்கைதிகளுக்கும் கொரோனா பரவ தொடங்கியுள்ளதால், சிறைக்கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக 45,000 சிறை கைதிகளை விடுவிக்க துருக்கி நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் தையீப் எர்டோகன் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 279 பேரும், எதிராக 51 பேரும் வாக்களித்துள்ளனர். இதனால், விரைவில் 45 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுவிக்கபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில், அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து சிறை சென்றவர்களை அந்நாட்டு அரசு விடுவிக்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.