ட்விட்டரை வாங்க 43 பில்லியன் டாலர் – இறுதி ஆஃபர் கொடுத்த எலோன் மஸ்க்!

Published by
பாலா கலியமூர்த்தி

ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் இறுதி ஆஃபர்.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டபோது, மஸ்க் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லருக்கு எழுதிய கடிதத்தில், ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு ( கிட்டத்தட்ட 3 லட்சம் கோடிக்கு மேல்) நானே வாங்கிக்கொள்கிறேன் என்றும் இதுதான் தனது சிறந்த மற்றும் இறுதி சலுகை எனவும் தெரிவித்துள்ளார். 9% பங்குகளுடன் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் மஸ்க், இறுதி ஆஃபரை ஏற்காவிட்டால் நான் ஒரு பங்குதாரராக எனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் ட்விட்டருக்கு அசாதாரண ஆற்றல் உள்ளது. நான் அதைத் திறக்கிறேன் என்று கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் சந்தையில் ட்விட்டரின் பங்குகள் 12 சதவீதம் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்! RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்! 

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

40 minutes ago
ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!

ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

46 minutes ago
டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…

1 hour ago
“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன? “GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன? 

“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன?

சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…

2 hours ago
“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!

“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!

விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…

3 hours ago
“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…

3 hours ago