இதுவரை 4000 குழந்தைகளின் உயிரை குடித்த “Blue Whale” என்ற ஆன்லைன் game….!
ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஒரு உயிர்கொல்லி ஆன்லைன் கேம் ‘Blue Whale’ என்ற தற்கொலை விளையாட்டு.
‘நீல திமிங்கலம்’ என்ற இந்த விளையாட்டில் முகம் தெரியாத யாரோ ஒருவர் கொடுக்கும் கட்டளை அடிப்படையில் நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக் கொள்வது, மொட்டைமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என்பன போன்ற வேலைகளை, போட்டிகளில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டும்.
போட்டியாளர்கள் நாள்தோறும் தங்கள் விபரீத விளையாட்டை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது இந்த விளையாட்டு விதியாகும்.
50 நாட்களுக்கு வெவ்வேறு விபரீத விளையாட்டுகள் இந்த கேமில் கொடுக்கப்படும். கடைசி கட்டமாக ஐம்பதாவது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும்படி கூறப்படும். இந்த விளையாட்டிற்கு ரஷியாவில் கடந்த 2015-ல் இருந்து 2016 வரை சுமார் 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விளையாட்டு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 29-ந்தேதி மும்பையில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் ஒருவன் இந்த விளையாட்டின் காரணமாக 5 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான். மேலும் இந்தூர் மற்றும் மகராஷ்டிராவை சேர்ந்த இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் மித்னாபூர் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் அங்கன் என்ற மாணவன் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி இருக்கிறான். நேற்று குளிக்க சென்ற அவன் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவன் பெற்றோர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாலிதீன் தாள்களை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கோலை செய்து கொண்டான்.
இந்த கொடூர நீல திமிங்கல விளையாட்டிற்கு அடிமையாகி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக முழுவதும் ‘நீல திமிங்கலம்’ என்ற இந்த ஆன்லைன் விளையாட்டின் தாக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர்.