ரஷ்யா தாக்குதலில் 40 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு! – அதிபர் ஆலோசகர் அறிவிப்பு
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் மக்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று உக்ரைன் வேண்டுகோள்.
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பு காரணமாக தற்போது வரை 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் அறிவித்துள்ளார். ரஷியா உடனான தூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக்கொள்வதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் மக்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் கூறியுள்ளது.
தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷிய சைபர் படையால் முடக்கப்பட்டுள்ளது.
விமானப்படை மட்டுமல்லாது பெலாரஸ் வழியாக ரஷிய தரைப்படையும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
உக்ரைனில் இருந்து வரும் மக்களுக்கு தஞ்சமளிக்க தயார் என அண்டை நாடான மால்டோவா அறிவித்திருந்தது. மேலும், நாட்டை பாதுகாக்க யார் முன்வந்தாலும் ஆயுதம் தருவோம், நாட்டைக் காக்க நகரங்களின் சதுக்கங்களில் தயாராக இருங்கள் உக்ரைன் அதிபர் விளாடிம்ர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.