4 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பதாக நடிகை கயல் ஆனந்தி இணை இயக்குனர் ஆகிய சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழ் திரை உலகில் பொறியாளன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் 2014ஆம் ஆண்டு அறிமுகமாகிய நடிகை தான் ஆனந்தி. இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர், 2012ஆம் ஆண்டு முதலே தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த இவர், அதன்பின் தமிழ் திரையுலகில் கயல் எனும் படத்தில் நடித்து கயல் ஆனந்தி எனும் பெயருடன் பிரபலமாகி, தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கயல் ஆனந்தி கயல் படத்திற்கு பின்பதாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், பரியேறும் பெருமாள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கயல் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அவ்வளவாக திரையுலக வட்டாரங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ இந்த நிகழ்வு தெரியவில்லை.
தற்பொழுது இதுகுறித்து கயல் ஆனந்தி உண்மை உடைத்துள்ளார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் அவர்களின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். கயல் ஆனந்தி திருமணம் செய்து கொண்டுள்ள சாக்ரடீஸ் என்பவர் அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னிசிறகுகள் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படங்களில் நடித்த பொழுது கயல் ஆனந்திக்கும் சாக்ரடீஸுக்கு காதல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கயல் ஆனந்தி, தானும் சாக்ரடீஸும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருந்து, அந்த நாள் சமீபத்தில் அமைந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் ஜனவரி 7 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது திருமணம் சினிமாலிருந்துதான் விலகுவதற்கு காரணமாக இருக்காது எனவும், தொடர்ந்து தான் நடிக்க உள்ளதாகவும், தற்பொழுதும் தனது கையில் நான்கு படங்கள் உள்ளதாகவும், அதில் முதலில் நடித்துக் கொடுத்து விட்டு அதன் பின், கிடைக்கும் வாய்ப்புகளையும் தவறவிடாமல் படத்தில் நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…