ஐநா பாதுகாப்பு கவுன்சில் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்று உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரிதாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கி, இதுவரை இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் என பல நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவை உள்ளடக்கிய 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது.இதன் கூட்டம் தலைவர் ஜாங் ஜுன் தலைமையில் நடைபெற்றது.ஆனால் இந்த கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வழக்கமாக உறுப்பினர்கள் அனைவரும் நேரில் கலந்து கொள்வார்கள்.ஆனால் கொரோனா காரணமாக முதன்முறையாக பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.