முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற 4 அமெரிக்கர்கள் – ஸ்பேஸ்எக்ஸ் சாதனை..! …!

Default Image

முதல் முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களில் 4 பேரை  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4பேர் கொண்ட குழுவினர் இன்று விண்வெளிக்கு சென்றனர்.

புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 9.30 மணிக்கு பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் ஷிப்ட்-4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன், செயின்ட் ஜூட் மருத்துவமனையின் மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ் ஆகியோருடன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்ஜி, சியான் ப்ராக்ட் ஆகிய 4 பேரும்  விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

இந்த விண்கலத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன் – 4 என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 575 கிலோ மீட்டர் உயரத்தில் சீறிப்பாய்ந்த ராக்கெட் அடுத்த 3 நாட்களுக்கு விண்வெளியை சுற்றி வரும் என்றும் பயணம் முடிந்த பிறகு, அட்லாண்டிக் கடலில் பால்கன் ராக்கெட் தரை இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்,எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்