காலில் காலணிகளை அணிந்து இருந்தால் போதும், 4 லட்சம் சம்பளமாம்! எங்கு தெரியுமா?

இருந்த இடத்திலிருந்தே 12 மணி நேரம் காலணிகளை அணிந்து இருப்பதற்கு 4 லட்சம் சம்பளமாக இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று கொடுக்கிறதாம்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே உழைத்தால்தான் குடும்பத்தை நன்முறையில் நடத்தி செல்ல முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் பெண்கள் வெளியில் சென்று கடினமாக உழைக்க கூடிய எண்ணத்தை விட வீட்டிலிருந்தபடியே ஏதாவது உழைக்கலாம் என யோசிப்பவர்கள் பலர் இருப்பார்கள். எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் ஒரு விளம்பரம் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் அமர்ந்த இடத்திலிருந்தே ஒரு மாதத்திற்கு மில்லியன் ரூபாய் வரையிலும் சம்பாதிக்க முடியுமாம்.
இங்கிலாந்தை சேர்ந்த பெட்ரூம் அத்லெடிக்ஸ் எனும் நிறுவனம் காலனி சோதனையாளர் எனும் வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படிஅவர்கள் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட கூடிய காலணிகளை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் போட்டு இருந்தால் போதுமாம். இதுதான் இந்த காலனி சோதனையாளரின் வேலை. இந்த வேலைக்காக 4 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படும். மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை உண்டு என கூறப்படுகிறது. இந்த வேலையை செய்ய விரும்பினால் அவர்களது இணையதளத்தில் சுய விவரங்களை நிரப்பும் பொழுது நிறுவனத்தின் சார்பில் பதில் கிடைத்ததும் நீங்கள் வேலையை துவங்கலாம். இப்பொழுது இந்த காலனி சோதனையாளர் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்திற்கு காலனி சோதனையாளர் பணிக்காக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025